Welcome To weekly News Paper Delta
தஞ்சை திருச்செந்தூர் முருகன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு
126 Views

தஞ்சாவூர்: தஞ்சை திருச்செந்தூர் முருகன் ஆக திகழும் தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று 6ம்தேதி புதன்கிழமை கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பஞ்ச மூர்த்திகள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இத்தலத்தில் நாளை 7ம்தேதி வியாழக்கிழமை இரவு 6மணிக்கு புகழ்பெற்ற சூரசம்ஹாரம் ஐதீக முறைப்படி நடக்கிறது. இன்றைய வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

.