தஞ்சை ரெயில் நிலையத்திற்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும் அகில பாரத பார்க்கவ குல சங்கம் வேண்டுகோள்
தஞ்சாவூர்: தஞ்சை ரெயில் நிலையத்திற்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும் என அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன், செம்பியன் மாதேவிக்கு சென்னை மெரினா கடற்கரையில் மணிமண்டபம் அமைத்துதர வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையான சமூக மக்கள் கொண்ட பார்க்கவ குலம் மக்களின் சாதி சான்றிதழ்களில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது.பார்க்கவகுல மலையமான், பார்க்கவகுல நத்தமான், பார்க்கவகுல சுருதிமான், பார்க்கவ குல மூப்பனார் பார்க்கவகுலநயினார் என்ற அடையாளத்தோடு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டில் பார்க்கவகுல சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் எங்கள் சமுதாய எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். தஞ்சை ரெயில் நிலையத்திற்கு ராஜராஜசோழன் பெயர் சூட்ட வேண்டும். சோழர்களின் பொற்கால ஆட்சியை உணர்ந்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல் வைத்ததற்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறோம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நகைக்கடன் குறைந்த வட்டிக்கு அதிக தொகை வழங்குவதுடன் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்ப ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.