Welcome To weekly News Paper Delta
தஞ்சையில் 2 நாட்கள் தொடர் கனமழை பள்ளி சுவர் இடிந்து விழுந்து சேதம்
128 Views

தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் தஞ்சை மிஷின் மேட்டு தெரு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பிளேக் மேல்நிலைப்பள்ளி சுற்றுசுவர் கனமழை காரணமாக திடீரென சரிந்து விழுந்தது மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் இந்த கனமழை தொடர்ந்தால் முற்றிலுமாக சுவர் விழுந்து உயிர் சேதம் விளைவிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் மேலும் நாளை பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் உயிர் சேதத்தை தவிர்க்க அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

.