Welcome To weekly News Paper Delta
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
46 Views

தமிழக வெற்றி கழகம் தஞ்சை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி சார்பில் திருக்கானூர் பட்டியில் மாவட்ட பொறுப்பாளர் இரா விஜய் சரவணன் தலைமையில், கிழக்கு ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் 150 மகளிருக்கு போர்வை அரிசி கேக் வழங்கப்பட்டது. தஞ்சை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி குழந்தை தெரேசா மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகிகள் ராஜா, முத்துராமன், கார்த்தி,ஒன்றிய நிர்வாகிகள் சாந்தி கார்த்திக், செந்தில், திருக்கானூர்பட்டி நிர்வாகிகள் வின்சென்ட், ரட்சகன், பெரியநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.