Welcome To weekly News Paper Delta
தஞ்சையில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
46 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.4358.70 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், ரூ.2826.00 இலட்சம் மதிப்பில், பல்வேறு அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர். கோவி.செழியன், தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தஞ்சாவூர் கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம், ச.முரசொலி எம்.பி, எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை,என்.அசோக்குமார், முனைவர்.எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண்.இராமநாதன், க.சரவணண் , மாவட்ட ஊராட்சித்தலைவர் ஆர்.உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம்பூபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.