Welcome To weekly News Paper Delta
விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
72 Views

தஞ்சாவூர்: விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம். மத்திய பாஜக அரசு தொழிலாளர்கள் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தின் 5-ம் ஆண்டினை முன்னிட்டு ஐ கே விவசாயிகள் முன்னணியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் மோசடியான தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்து விவசாய சங்கத்தினர் ஒன்றிணைந்து கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

.