Welcome To weekly News Paper Delta
தஞ்சை மூலை அனுமாருக்கு வாழை பழ அலங்காரம் தை அமாவாசை சிறப்பு வழிபாடு
66 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூரில் வாயு மூலையில் அமைந்த ஒரே அனுமன் ஆலயம் ஆகும். மூலை அனுமாரின் மணி கட்டிய வாலில் சனீஸ்வரன் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் பக்தர்கள் தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு அமாவாசையன்று வழிபடும் பக்தர்களுக்கு சூட்சும ரூபத்தில் ஒரு வித ஆதர்ஷண அலைகள் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.எனவே இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் அமாவாசை வழிபாட்டில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் அஷ்டோத்திர அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு வாழைப்பழங்களான சிறப்பு அலங்காரமும் அதனைத்தொடர்ந்து மூலவருக்கு 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாத்தி சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது.வாழைப்பழம் மீண்டும் முளைப்பது இல்லை.ஆகையால் மூலை அனுமாருக்கு பக்தர்கள் 27 வாழைப்பழங்களான மாலை சாத்தி வழிபட்டால் மீண்டும் பிறவாமை ஏற்படாது என்று நம்புகின்றனர்

.