இன்று சித்திரை நட்சத்திரத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் தரிசனம்
———- தஞ்சாவூர் வடக்குவீதி இராஜ கோபால சுவாமி கோவிலில் இன்று காலை மாசி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் சிறப்பு திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இத்தலத்தில் பக்தர்கள் பிரதி சித்திரை நட்சத்திரம் மற்றும் புதன் கிழமையில் மிளகு, உப்பு, வெல்லம் வைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தார்கள்.