Welcome To weekly News Paper Delta
தஞ்சை பெரிய கோயிலில் சோமாவார பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
26 Views

தஞ்சாவூர்: கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பலவகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் எழுந்தருளி இருக்கும் மகாநந்தியம் பெருமானுக்கு கார்த்திகை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, ஏராளமான பக்தர்கள் நந்தி மண்டபம் முன்பு அமர்ந்து அபிஷேகத்தை கண்டு நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.

.