Welcome To weekly News Paper Delta
புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவோம் கலெக்டர் பிரியங்கா பங்கு ஜம் அறிவுறுத்தல்
68 Views

தஞ்சாவூர்: புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினை கொண்டாடினர். தற்போது அந்த பண்டிகையில் பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் போன்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருவதோடு, விபத்துக்களையும் சந்திக்கின்றனர். மேலும் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது. எனவே போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்

.