Welcome To weekly News Paper Delta
தஞ்சையில் ஊர்க்காவல் படை பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா
110 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய ஆளுநர்களுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெற்றது தேர்வான ஆளுநர்கள் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை 45 நாட்கள் அடிப்படை பயிற்சியை முறையாக பெற்றனர் இன்று அதற்கான அடிப்படை பயிற்சி அறிவிப்பு நிறைவு விழா தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது இதனை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமை தாங்கி முன்னிலை வகித்தார் இவ்விழாவில் 107 புதிய ஊர்க்காவல் படை ஆளுநர்கள் அணி வகுப்பில் பங்கேற்று தங்களின் பயிற்சி திறன்களை வெளிப்படுத்தினர் இதில் இரண்டு திருநங்கைகளான தர்ஷினி மற்றும் குட்டிமா இந்த பயிற்சி திறனில் பங்கேற்றனர் பின்பு அவர்கள் தெரிவித்ததாவது இந்த சமூகத்தில் திருநங்கைகள் ஆகிய எங்களுக்கு வேலை தருவதற்கே யோசிக்கும் நபர்களுக்கிடையே எங்களையும் மதித்து உயர்ந்த பதவியான இந்த பதிவியை வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த பணியில் நாங்கள் நேர்மையுடனும் உண்மையாகவும் காலம் முழுதும் செயல்படுவோம் என்றும் கண்ணீர் மல்க கூறினர்.

.