Welcome To weekly News Paper Delta
தஞ்சையில் கலைஞர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
114 Views

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி இன்று தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க சார்பில் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ,.டி. கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ,.மேயர் சன். இராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம்,முன்னாள் நகர் மன்ற தலைவர் சி.இறைவன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

.