Welcome To weekly News Paper Delta
தஞ்சை மூலை அனுமார் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு
68 Views

தஞ்சாவூர்: தஞ்சை மூலை அனுமார் கோயிலில் இன்று 30ம்தேதி சனிக்கிழமை கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோயில் உள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது.தஞ்சையில் உள்ள பிரதான நான்கு ராஜ வீதிகளில் வடமேற்கு வாயு மூலையில் மூலை அனுமார் கோயில் அமைந்துள்ளது என்பது தனிச்சிறப்பாகும்.இத்தலத்தில் வாலில் மணி கட்டிய மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரன் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். தொடர்ந்து 48 சனிக்கிழமை அல்லது 18 அமாவாசைகள் 18 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 18 வலம் வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் கார்த்திகை அமாவாசை இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று 30ம்தேதி சனிக்கிழமை கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலை அனுமாருக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் மற்றும் சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைப்பெற்றது.ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலை சாத்தி வழிபட்டால் ஏக்கங்கள் நீங்கி வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஏலக்காய் மற்றும் கிராம்புகளாலான சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நட்சத்திர தீப வழிபாடு ஆண்டுதோறும் இத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் அவரவருக்கு உகந்த ஏதேனும் ஒரு தினத்தில் 27 நட்சத்திரங்கள் தீபமேற்றி வாழ்வில் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி 27 எலுமிச்சை பழங்களான மாலையும் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட அவரவர் கையால் தொடுத்த 27 வெற்றிலைகள் மாலையும் மீண்டும் இப்பூவுலகில் பிறவாமை வேண்டி 27 வாழைப்பழங்களான மாலையும் மூலை அனுமாருக்கு சாத்தி வழிபடுவோருக்கு அடுத்த வருடத்திற்குள் திருமணம் நடக்கும்,குழந்தை பேறு கிட்டும் ,மற்றும் எண்ணியவை எண்ணியபடி நடக்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள். இவ்வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மணிகண்டன் மற்றும் அமாவாசை வழிபாடு கைங்கர்யம் தொண்டர்கள் செய்து இருந்தார்கள்.

.