வெள்ளைப் பிள்ளையாருக்கு வெள்ளை அன்னத்தால் அபிஷேகம்
தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் இன்று 15ம்தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இரவு மூலவர் வெள்ளைப் பிள்ளையாருக்கு வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூரில் இத்தலத்தில் மட்டுமே ஆனைமுகனுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறுவது தனிச்சிறப்பாகும்.சிவ மைந்தனுக்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்