தஞ்சையில் ஓவியம் சிற்பக்கலை கண்காட்சி படைப்புகளை அனுப்ப கலைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
தஞ்சையில் நடக்கும் ஓவி யம், சிற்பக்கலை கண் காட்சியில் வைக்க படைப்புகளை அனுப்ப வேண்டும் என கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலை பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப்பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கண் காட்சிகள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியம், சிற்பக்கலை காட்சியை மண்டல அலுவலகங்களில் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது. தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி,மயிலாடுதுறை) உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக்கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட் சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்திடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவிய, சிற்ப கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபுவழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்பபடைப்புகளை வழங்க வேண்டும். அனைத்து ஓவிய, சிற்ப கலைப்படைப்புகளும், ஓவிய, சிற்ப கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். அக்கலை படைப்புகள் அனைத்தும் மண்டல கலை பண் பாட்டு மைய உதவி இயக்குனர் அளவில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். அதில் முதல் பரிசாக கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் தங்களது கலை படைப்புகளை தன் விவர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் உதவி இயக்குனர், மண் டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சை- 613403 என்ற முகவரிக்கு அடுத்தமாதம் (நவம்பர்) 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-232252 என்ற எண்ணை தொடர்பு கொள் ளலாம்.மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.