Welcome To weekly News Paper Delta
ரிமோட்டை கொண்டு அடித்தேன். அதை வேறு ஒருவன் தூக்கிக்கொண்டு ஓடி விட்டான் அதனால் எடுத்த முடிவு தான் கூட்டனி கமலஹாசன் பேச்சு
68 Views

தஞ்சாவூர் கவிஞர் சினேகன் தந்தை பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு கமலஹாசன் எம்.பி பேசினார் அப்போது அவர் கூறியதாவது, ரிமோட்டை கொண்டு அடித்தேன். அதை வேறு ஒருவன் தூக்கிக்கொண்டு ஓடி விட்டான். அதனால் எடுத்து ஒழித்து விட்டேன். ரிமோட்டால் ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம் என கமல்ஹாசன் பேச்சு: முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் - தொண்டு வழங்கிக் கொண்டு பிறகு அரசியலில் வந்து மூத்தவர்களிடம் - மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்று கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது கூடி நின்றாக வேண்டும். எதற்காக தி.மு.கவில் சேர்ந்தீர்கள். ரிமோட்டை தூக்கிப்போட்டீர்களே. ஏன் மறுபடி தி.மு.கவிற்கு போனீர்கள். ரிமோட்டை தூக்கி போட்டேன். அதான் ஜனநாயகம் விமர்சிக்க வேண்டும். ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான் ஆகா அங்கு போக கூடாது. ரிமோட் ஸ்டேட்ஸில் இருக்க வேண்டும் - கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும். ரிமோட்டை கொடுப்போமா. எடுத்துட்டு வா திருப்பி ஒளித்து வைத்துக் கொள்வோம். ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து தூக்கி கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த அலையன்ஸ். புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் ஜனநாயகம் அப்படி என்று வந்து விட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீர வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் அது வேண்டாம் என்றால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம் ‌ இந்த அரசியல் செய்தி போதுமானது இவ்வாறு பேசினார்.

.