Welcome To weekly News Paper Delta
திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆலயத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
78 Views

தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகள் 178 வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் உள்ள சத்குரு ஸ்ரீதியாகராஜர் ஆலயத்தில் பந்தல்கால் நடப்பட்டது. ஜனவரி மாதம் 14ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்னை கீர்த்தனை 18ம் தேதி நடைபெறுகிறது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சன வீதியில் வாழ்ந்து காவிரி கரையில் முக்தி அடைந்தார் அவர் முக்தி அடைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 178 வது ஆராதனை விழா வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி துவங்கி 18ம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை 18ம் தேதி நடைபெறுகிறது அன்று நாடு முழுவதிலும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் தியாகராஜர் சன்னதி முன்பு அமர்ந்து பஞ்சரத்னை கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசைஅஞ்சலி செலுத்துவார்கள் இந்த விழாவையொட்டி இன்று திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜர் ஆலயத்தில் இன்று பந்தல்கால் நடப்பட்டது முன்னதாக தியாகராஜருக்கும் பந்தல் காலுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்திலிருந்து பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நடப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தியாகராஜரை வணங்கினர்

.