Welcome To weekly News Paper Delta
இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் நாளை 404வது ஆண்டு பட்டாபிஷேகம் மகோற்சவம் விழா
74 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் வருகின்ற மார்ச் 1ம்தேதி சனிக்கிழமை 404வது ஆண்டு பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவும் மார்ச் 6ம்தேதி வியாழக்கிழமை 430வது ஆண்டு இராகவேந்திர சுவாமிகளின் பிறந்த நாள் இராகவேந்திர சுவாமிகள் ஜெயந்தி விழாவும் நடக்கிறது. தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் புகழ்பெற்ற இராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இராகவேந்திர சுவாமிகள் பிறப்பு வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை கி.பி1595ம் ஆண்டு தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.இவரே பின்னாளில் இராகவேந்திர சுவாமிகள் ஆனார். தஞ்சையில் துறவு "ஸ்ரீவேங்கடநாதன்" 1621-ம் ஆண்டு தஞ்சை நகரத்தில் சன்னியாச தீட்சைப் பெற்று வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஸ்ரீ ரகுநாத பூபால் என்ற நாயக்க மன்னர் முன்னிலையில் நடை பெற்று "ஸ்ரீ ராகவேந்திரர்" என்ற திருநாமம் பெற்றார். துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.இல்லறத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு துறவறம் மேற்கொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல. மிகுந்த மனப்பக்குவத்தையும் அடைந்தவர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் இராகவேந்திர சுவாமிகளுக்கு நடைபெற்ற துறவறம் பதவி ஏற்பை பட்டாபிஷேகம் விழாவாக ஆண்டுதோறும் தஞ்சாவூர் வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் கொண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாண்டு 404ம்ஆண்டாக அமைந்துள்ளது. சுதீந்திர தீர்த்தர் வெங்கடநாதரை சன்னியாசத்தில் அர்ச்சனை செய்து ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் ஆசிரம நாமத்தை அவருக்கு வழங்கினார். இந்த பெயரை மூல ராம தேவரு ஒரு கனவில் அவருக்குக் குறிப்பிட்டார். கூடியிருந்த அறிஞர்கள், அரசவையினர், தலைவர்கள், பண்டிதர்கள் மற்றும் மன்னர் குழு இந்த தெய்வீக விழாவைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது. இந்தப் பெரிய துறவியின் தீட்சையை நேரில் கண்டதில் அவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். இராகவேந்திர சுவாமிகள் 404ஆம் ஆண்டு பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு மார்ச் 1ம்தேதி சனிக்கிழமை (01/03/2028) காலை 108 கலச அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் அதனைத்தொடர்ந்து பட்டாபிஷேகம் சிறப்பு மலர் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது . பகல் 12 மணிக்கு அன்னதானம் வெகுவிமரிசையாக நடக்கிறது. வருகின்ற மார்ச் 6ம்தேதி வியாழக்கிழமை (06/03/2025) 430ம் ஆண்டு இராகவேந்திர சுவாமிகளின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காலை 108 கலச அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12மணிக்கு அன்னதானம் நடக்கிறது.இரு தினங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு குருராயர் அருள் பெறுவோம்! இந்தியாவில் எத்தனையோ இராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் இருந்தாலும் மூல பிருந்தாவன் மற்றும் தஞ்சாவூர் வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் என இரு பிருந்தாவனத்தில் மட்டுமே இராகவேந்திர சுவாமிகளின் திருப்பாதங்கள் நடந்து உலாவிய இடம் ஆகும். தஞ்சாவூர் வரும் சுற்றுலா பயணிகள் அவசியம் இந்த வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தை தினசரி காலை வேளையில் தரிசனம் செய்ய திட்டமிட்டு செல்லலாம்

.