Welcome To weekly News Paper Delta
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு இராகு கால அலங்காரம்
232 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று 21ம் தேதி கார்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தை முன்னிட்டு சோழர்கள் வழிபட்ட துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இத்தலத்தில் பக்தர்கள் பிரதி பௌர்ணமி மற்றும் அமாவாசை மற்றும் செவ்வாய் வெள்ளி ஞாயிறுகளில் இராகு காலத்தில் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்கள்.

.