Welcome To weekly News Paper Delta
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் விற்பனைத் திருவிழா
108 Views

தஞ்சாவூர்: மருதுபாண்டியர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறை சார்பில் விற்பனை திருவிழா நடந்தது. விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். தஞ்சை பல் மருத்துவ மைய மூத்த பல் டாக்டர் ரேகாராஜ் மோகன் கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினார். கல்லூரி முதல்வர் விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். இதில் மாணவ,மாணவிகள் உணவுப்பொருட்கள், ஆபரண, ஒப்பனை பொருட்கள், இயற்கை நுகர்வு பொருட்கள், பழச்சாறுகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை தொடர்பான திறமைகளை வளர்த்து கொண்டனர். முன்னதாக வணிக மேலாண்மை துறை தலைவர் வித்யா வரவேற்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

.