Welcome To weekly News Paper Delta
கார்த்திகை 4வது சோமவாரம் 108 சங்காபிஷேகம்
52 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் பூமாலை ராவுத்தன் கோயில் என்கிற வைத்தியநாத சுவாமி கோயிலில் இன்று 9ம்தேதி கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு வைத்தியநாத சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பாலாம்பிகை சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இத்தலத்தில் பக்தர்கள் பிரதோஷம் தோறும் ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

.