Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி சிறப்பு அலங்காரம்
56 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றான மாமணி கோயிலாக திகழும் நீலமேகப் பெருமாள் கோயிலில் இன்று (7.4.26) செவ்வாய்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு காலை வாரக மூர்த்திக்கு சிறப்பு கனிகள் மற்றும் கிழங்கு வகைகளாலான சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. வராக ஜெயந்தி என்பது விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக மூர்த்தி (பன்றி முகம், மனித உடல்) அவதரித்த நாளாகும். இது பங்குனி மாத தேய்பிறை பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது. பூமியை இரண்யாட்சனிடமிருந்து மீட்டு, பாற்கடலில் இருந்து காத்து, நிலத்திற்கு அதிபதியாக வராகர் திகழ்கிறார். இவரை வழிபட்டால் பூமியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாதாள லோகத்தில் மறைத்து வைத்தபோது, விஷ்ணு பன்றி (வராகம்) உருவம் எடுத்து, அசுரனைக் கொன்று, தன் தந்தங்களால் பூமியைத் தூக்கி மீண்டும் நிலைநிறுத்திய புராண நிகழ்வே வராக அவதார வரலாறாகும். இது கிருத யுகத்தில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் வராக அவதாரம் தினம் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் இன்று நடைபெற்ற வராக ஜெயந்தி விழாவில் முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வாராகப் பெருமாளை தரிசனம் செய்தார்கள்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் சம்பத் பட்டாச்சார்யார் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகத்தினர் செய்து இருந்தார்கள்.

.