தஞ்சையில் செல்லப் பிராணிகள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர்: தஞ்சை பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி வருகிற 29- ம் தேதி நடக்கிறது என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்ட கலெக்டர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் பல் வேறு பிராணிகள் நல செயல் பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தஞ்சை மாநகராட்சியில் சுற்றத்திரியும் ஆதரவற்ற நாய்களுக்கு தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை வழங்கி வருகிறது. மேலும் நாய்களையும், செல்லப்பிராணிகளையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாய்களுக்கான கண் காட்சி நடத்தியது. இலவச வெறிநோய் தடுப்பூசிகள் தொடர்ந்து நாய்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முயற்சி யாக தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக உறவில்லாத பிராணிகளுக்கு உறவை தேடும் நிகழ்ச்சி வருகிற 29- ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாதாக்கோட்டை சாலையில் உள்ள பிராணிகள் வதை தடுப்பு சங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வீட்டில் வளர்க்க இயலாத செல்லப்பிராணிகள் மற்றும் ஆதரவற்ற சமூக பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்வில் பிராணிகளை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர், பொதுமக்கள், விலங்கு நல ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் 9843226695 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.