Welcome To weekly News Paper Delta
தஞ்சை மாவட்ட த.வெ.க செயலாளர் தேர்வு: விஜய் சரவணன் பெரியார்,அண்ணா, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
120 Views

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக விஜய் சரவணனை அறிவித்துள்ளனர். இதையடுத்து புதிய மாவட்ட தலைவராக பதவியேற்ற அவருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் பள்ளி அக்ரஹாரம் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்தார். அதை தொடர்ந்து விஜய். சரவணன் தலைமையில் கட்சியினர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று கீழவாசல் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கும், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் பல்வேறு தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றினார். இதில் மாநில, மாவட்ட, மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

.