Welcome To weekly News Paper Delta
தஞ்சை கீழவீதி, கீழஅலங்கம், கொண்டிராஜபாளையம், வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
110 Views

தஞ்சாவூர்: தஞ்சை கீழவீதி, கீழஅலங்கம், கொண்டிராஜபாளையம், வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், நகர செயலாளர் வடிவேல், திராவிட மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க புதியநிர்வாகிகள் கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கே.ஜி.வெங்கடேஷ், செயலாளராக ஆர். கணேஷ், பொருளாளராக ஆர்.ராஜன் துணைத் தலைவர்களாக என்.முருகேசன், பி.கே.செந்தில் குமார், எஸ்.சோமசுந்தரம், துணைச் செயலாளர்களாக ஆர்.சுரேஸ், டி. சீனிவாசன், அழகிய மணவாளன், ஒருங்கிணைப்பாளராக ஆர்.பிரகாஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு மக்களின் வாங்கும் திறனை பற்றி கவலை படாமல் உயர்ந்து கொண்டே போவது குறித்து கவலை படுகிறோம், மத்திய, மாநில அரசுகள் மக்களைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் அலுவலர் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுத்திட லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அதிக அறிவிப்பு பலகைகள் பொருத்த வேண்டுகிறோம். கொடிமரத்து மூலை பகுதியில் மீன் மொத்த வியாபார மார்க்கெட் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மீன் கழிவுகளை அகழியில் கொட்டி சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மீன் மொத்த வியாபாரம் மார்க்கெட்டை நகரத்திற்கு வெளியே அமைத்திட வேண்டுமென தஞ்சை மாநகராட்சியை பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.

.