Welcome To weekly News Paper Delta
கோவை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு காவிரி விவசாய சங்க மாநில தலைவருக்கு போலீசார் வீட்டு காவல்
144 Views

தஞ்சாவூர்: கோவைக்கு வரும் பிரமதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநில தலைவரை போலீசார் தஞ்சையில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். தஞ்சை இ.பி.காலனி அருகே உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவராக உள்ளர். இவர் கோயம்புத்தூருக்கு வரும் பிரதமருக்கு விவசாயிகளை திரட்டி கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி விவசாயிகள் பழனியப்பன் தலைமையில் நேற்று இரவு தஞ்சையில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோயம்புத்தூருக்கு செல்வதாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் பழனியப்பன் வீட்டிறகு சென்று அவரை வீட்டுக்காவலில் வைப்பதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. திட்டமிட்டபடி போராட்டம் இதையடுத்து மற்ற விவசாயிகள் கோவை புறப்பட்டு சென்றனர். இது குறித்து மாநில தலைவர் பழனியப்பன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல்கொள்முதலின் போது ஈரப்பதத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம் மழையால் நனைந்த நெல்லை ஆய்வு செய்து சென்ற குழு 3 வாரமாகியும் இது வரை உயர்த்தி அறிவிக்கவில்லை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என கேட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. விவசாயிகளின் லாபத்தை 2 மடங்காக உயர்த்துவோம் என ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோயம்புத்தூருக்கு வரும் பிரமதமருக்கு கருப்புக்கொடி போராட்டம் அறிவித்து இருந்தோம். ஆனால் என்னை வீட்டுக்காவலில் வைத்து விட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி 700 விவசாயிகள் பங்கேற்கும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஒன்றிய அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்கிறது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்

.