Welcome To weekly News Paper Delta
வெள்ளைப்பிள்ளையாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம
136 Views

தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி பெருவிழா விடையாற்றி விழாவை முன்னிட்டு மூலவர் வெள்ளைப்பிள்ளையார் வல்லபை சமேத ஶ்ரீ வல்லப விநாயாகராக சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா விடையாற்றி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சந்தனக்காப்பில் விநாயகர் தம்பதி சமேதராக காட்சி தருவது வழக்கமாகும். இதனை காண கண் கோடி வேண்டும். இத்தலத்தில் பிரதி வியாழக்கிழமை மாலை 6-8 திருமண பரிகாரம் அர்ச்சனை செய்து வழிபட்டால் மணப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

.