Welcome To weekly News Paper Delta
தஞ்சை மண்டல தி.மு.க. மருத்துவ அணி சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கோவி. செழியன் பங்கேற்பு
74 Views

தஞ்சாவூர்: பகுத்தறிவு இருந்தால் தான் சமூக நீதி வரும் என்று தஞ்சையில் நடந்த மண்டல அளவிலான தி.மு.க. மருத்துவ அணி சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டத்தில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறினார். தஞ்சை மண்டல தி.மு.க. மருத்துவ அணி ( தஞ்சை மத்தி, தெற்கு, வடக்கு, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள்) சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முரசொலி எம்.பி., முன்னாள் எம்.பி. ராமலிங்கம், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம்பூபதி வரவேற்றார். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், தி.மு.க. மருத்துவ அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி., செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர்கலந்து கொண்டு பேசினர். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது:- தமிழகத்தில் நடப்பது தி.மு.க. ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கைகளை காப்பாற்றும் தலைவர் தான் மு.க.ஸ்டாலின். அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டானும் அதனை பின்பற்றி வருகிறார். சமூக நீதி என்பது எல்லாருக்கும், எல்லாம் போய் சேர வேண்டும் என்பது தான். சாதி ஒழிப்பில் அக்கறை சாதி ஒழிப்பு என்பது வேறு, சமூக நீதி என்பது வேறு. சமூக நீதிக்காக போராடிய பல தலைவர்கள் கூட சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லை. ஆனால் பெரியார், அண்ணாவுக்குப்பிறகு சாதி ஒழிப்பில் அக்கறை காட்டியவர் கருணாநிதி. பகுத்தறிவு இருந்தால் தான் சமூக நீதி வரும். சமூக நீதியை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நமக்கு தந்தனர். அதனை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் காத்துக்கொண்டு இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைவரையும் தேடிச்சென்று உதவி செய்வது சமுக நீதி. அதைத்தான் கருணாநிதி செய்தார். அவர் வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை. பகுத்தறிவு இல்லை என்றால் பகைமை, வேற்றுமை, மடைமை, துவேசம், வெறுப்பு, இழிவு ஆகியவை வரும். பகுத்தறிவு இருந்தால் இவற்றை ஒழிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், மருத்துவ அணி அமைப்பாளர்கள், துணைஅமைப்பாளர்கள் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் தஞ்சை மத்தியமாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

.