தஞ்சையில் முதல் முறையாக ஒரே நாளில் ஏழு கோயில்களில் இன்று பாலாலயம் நடைபெற்றது
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 17ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஏழு விமானங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது. தஞ்சையில் இன்று ஒரே நேரத்தில் ஏழு கோயிலில்களில் விமானங்களுக்கு பாலாலயம் நடந்தது . தஞ்சையில் இதுபோன்று ஏழு கோயிலில்களில் விமானங்களுக்கு பாலாலயம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த பிரபலமான ஏழு கோயிலில்களில் இன்று காலையில் விமானங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது. பாலாலயம் நடைபெற்ற கோயில்கள் தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகநாத விநாயகர் திருக்கோயில், மேல அலங்கம் அருள்மிகு வடபத்ர காளியம்மன் கோயில் மற்றும் அருள் மிகு சுப்ரமணியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில்,108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வெண்ணாற்றங்கரை அருள்மிகு நீலமேகம் பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு மேலசிங்கப் பெருமாள் திருக்கோயில், தஞ்சை திருப்பதி என்று அழைக்கப்படும் நாலுகால் மண்டபம் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் துவங்குவதால் நேற்று சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள் மாலை 06.00 முதல் இரவு 09.30 வரை நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து இன்று 17ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெற்றது . அதனைத்தொடர்ந்து யாகசாலை பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து அந்த ஆலயங்களில் உள்ள விமானங்களும் பாலாலய பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் மாதவன் மணிகண்டன் மற்றும் கோயில் திருப்பணி கமிட்டியினர் மற்றும் தெருவாசிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்