Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்குவீதி கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் 13ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினத்தை முன்னிட்டு இன் 13ம்தேதி புதன் கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பதி வேங்கடேச பெருமாள் இத்தலத்தில் கலியுக வேங்கடேச பெருமாளாக காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு புகழ்பெற்ற நவக்கிரக சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலம் நித்ய சொர்க்க வாசல் கோயிலாகும். 13ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினம் இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் இன்று‌ 13ம்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் அர்ச்சனை தீபாராதனை நடந்தது .மாலை 6 மணிக்கு ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ கலியுக வேங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திருமணம் ஆகாத இருபாலரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.இதன் பலனாக இவர்களுக்கு நினைத்தபடி மணவாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து கலந்து கொண்டார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் மாதவன் மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.தஞ்சாவூர் கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
68 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்குவீதி கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் 13ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினத்தை முன்னிட்டு இன் 13ம்தேதி புதன் கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பதி வேங்கடேச பெருமாள் இத்தலத்தில் கலியுக வேங்கடேச பெருமாளாக காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு புகழ்பெற்ற நவக்கிரக சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலம் நித்ய சொர்க்க வாசல் கோயிலாகும். 13ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினம் இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் இன்று‌ 13ம்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் அர்ச்சனை தீபாராதனை நடந்தது .மாலை 6 மணிக்கு ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ கலியுக வேங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திருமணம் ஆகாத இருபாலரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.இதன் பலனாக இவர்களுக்கு நினைத்தபடி மணவாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து கலந்து கொண்டார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் மாதவன் மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.

.