Welcome To weekly News Paper Delta
தஞ்சை ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று நுரையீரல் ஆரோக்கியத்திற்கான இலவச மருத்துவ முகாம் நிர்வாக இயக்குனர் ஆர்.எம். பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
46 Views

தஞ்சாவூா் : தஞ்சை புதிய பஸ் நிலையம், சரபோஜி கல்லூரி ரோடு, டேவிட் அண்ட் கோ அவென்யூ நகரில் உள்ள "ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று "நுரையீரல் ஆரோக்கியத்திற்கான " இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது . இந்த முகாமை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஆர்.எம். பாஸ்கரன் தொடங்கி வைத்தார் ‌. இந்த முகாமில் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ராமசாமி கலந்துகொண்டு பொது மக்களுக்கு ஆஸ்துமா, இளைப்பு, அலர்ஜி, தொடர் சளி, தொடர் இருமல், மூச்சு திணறல்,அதிக அளவில் தும்மல், ஒவ்வாமை, நுரையீரல் சளி, சுவாசிக்கும் போது வலி, போன்ற நுரையீரல் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். இதில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

.