Welcome To weekly News Paper Delta
கந்தசஷ்டி சண்முகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்.
128 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதி காசி விஸ்வநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று 6ம்தேதி புதன்கிழமை இரவு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.இத்தலத்தில் மூலவராக காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் திகழ்கிறார்கள். இத்தலத்தில் சண்முகருக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் மணப்பேறு மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பிரதி கார்த்திகை நட்சத்திரம் தோறும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இன்றைய வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சண்முகரை தரிசனம் செய்தார்கள்

.