Welcome To weekly News Paper Delta
சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்று தஞ்சை மாணவர்கள் சாதனை
134 Views

தஞ்சாவூர்: கடந்த 27 டிசம்பர் அன்று தஞ்சாவூர் அழகிய குளம் பராமரிப்பு குழு சார்பில் ருத்ரன் சிலம்பம் பயிற்சி பெற்றவர்கள் கத்தார் நாட்டில் ஏசியன் ஓபன் சிலம்ப சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியா, மலேஷியா, சவூதி அரேபியா, யுனைடெட் அரப் எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஐ சேர்ந்த சிலம்ப வீரர்கள் பங்கு பெற்றனர். போட்டிகள் 6 வயதிக்குட்பட்டோர், 8 வயதிக்குட்பட்டோர், 9 வயது முதல் 12 வயது வரையிலும் , 13 வயது முதல் 14 வரையிலும், 15 வயது முதல் 16 வயது வரையிலும், 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பல்வேறு எடை பிரிவில் நடை பெற்றது. 13 வயது முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான போட்டி பிரிவில் கலந்து கொண்ட தஞ்சை பகுதியை சேர்ந்த மாணவன் முகிலன், பாலசுப்ரமணியம் தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கமும், தொடு முறை போட்டியில் தங்க பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளார். இதே போல் 15 வயது முதல்16 வயது பிரிவில் போட்டியிட்ட தஞ்சையை சேர்ந்த சூர்யா, கார்த்திகேயன் தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கமும், தொடு முறை போட்டியில் தங்க பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளார். கத்தார் நாட்டில் நடைபெற்ற ஏசியன் ஓபன் சிலம்ப சாம்பியன் ஷிப் போட்டியில் பங்குபெற்று நான்கு பதக்கங்களை வென்று தஞ்சைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை,ஜலேந்தின் சிலம்ப ஆசான் யோவான், பேராசான் வியாகுலசாமி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

.