தஞ்சை ஏடு இசட் மருத்துவமனை சார்பில் தேசிய அளவில ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
தஞ்சாவூர்: 63-வது தேசிய ரோலர் ஸ்கேட் டிங் சாம்பியன்ஷிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் தஞ்சை அக்சீலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி முத்தமிழ்தேவி கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு தஞ்சை ஏ டு இசட் மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஏ டு இசட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஆர்.எம். பாஸ்கரன் தலைமை தாங்கி பதக்கம் வென்ற பள்ளி மாணவியை பாராட்டி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் திருத்தேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கலந்து கொண்டு பேசினர். இதில் மாணவியின் பயிற்சியாளர்கள் ஜோஸ், ராஜூ, மாணவியின் தாய் தீபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.