Welcome To weekly News Paper Delta
மருதுபாண்டியர் கல்விநிறுவனங்களில் 76 வது குடியரசு தினவிழா
72 Views

மருதுபாண்டியர் கல்விநிறுவனங்களில் 76 வது குடியரசு தினவிழா தஞ்சை, பிப்.27 மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் நாட்டின் 76 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்து உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அத்திவெட்டி, நன்னடத்தை அலுவலர் (ஒய்வு), கி. சிதம்பரம் தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். அவர் தம் உரையில் மாணவர்கள் அனைவரும் தேசப்பற்று மிக்கவர்களாகவும், தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் நல்ல கல்வியை கற்று நாட்டுக்கும் வீட்டிற்கும் உறுதுணையாக இருக்கவேண்டும் என பேசினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா. விஜயா, முன்னிலை வகித்து உரையாற்றினார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப. சுப்பிரமணியன் மற்றும் துணைமுதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக இளநிலை இரண்டாமாண்டு தடயவியல் துறை மாணவி ச.சு. வெற்றிச்செல்வி வரவேற்புரையாற்றினார், நிறைவாக இளநிலை மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி நா. ஆர்த்தி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை தமிழத்துறை தலைவர் முனைவர் வீ. வெற்றிவேல் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு. அ. பூவலிங்கம், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ..... படவிளக்கம்: மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் அருகில் சிறப்பு விருந்தினர் அத்திவெட்டி, நன்னடத்தை அலுவலர் (ஒய்வு), கி. சிதம்பரம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அ. பூவலிங்கம், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா. விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப. சுப்பிரமணியன் மற்றும் துணைமுதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர்.

.