Welcome To weekly News Paper Delta
கிராமத்து அசல் கிழவிகளை தியேட்டரில் தாய் கிழவி படம் பார்க்க அழைத்த இளைஞர்
72 Views

தஞ்சாவூர்: தாய் கிழவி சினிமாவை பார்த்த தஞ்சாவூர் அருகில் உள்ள வைத்தியநாதன் பேட்டை கிராமத்து இளைஞர் பிரவீண் தனது கிராமத்தில் செங்கல் சூளையிலும், விவசாய கூலித்தொழிலாளியுமாக உழைத்துக்கொண்டே இருக்கும் அசல் தாய் கிழவிகளை தஞ்சைக்கு அழைத்து சென்று தனது பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், ஏசி தியேட்டரில் ராதிகா தாய் கிழவியாக நடித்து பேசும் பொருளாக உள்ள திரைப்படத்தை பார்க்க வைத்து மகிழ்ச்சியடைந்துள்ளார்: இது குறித்து வைத்தியநாதன் பேட்டை கிராமம் பிரவின்,பிச்சையம்மாள் கூறுகையில், தஞ்சையில் தாய் கிழவி சினிமாவை பார்த்தேன். இதே போல் நம்ம கிராமத்திலும் நிஜமான தாய் கிழவிகள் இருக்கிறார்களே 10 , 20 ஆண்டுகளாக தியேட்டர் பக்கமே போகாத அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று முடிவு செய்த பிரவீன் அவர்களை தஞ்சைக்கு அழைத்து சென்று தனது செலவிலேயே ஏசி திரையரங்கில் டிக்கெட் எடுத்துக் இவர்கள் ரொம்பவும் அன்பானவர்கள் நான் தாய் கிழவி சினிமா பார்த்ததும் இவர்களை அழைத்து வந்து சினிமா பார்க்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றார்

.