Welcome To weekly News Paper Delta
தஞ்சை மங்களபுரம், ஈஸ்வரி நகர் பகுதி வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு
148 Views

தஞ்சாவூர்: தஞ்சை மங்களபுரம், ஈஸ்வரி நகர் பகுதி வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தஞ்சை மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா, நகர தலைவர் சதீஷ்,துணைத் தலைவர் முகமது மசூத், நகர செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மங்களபுரம் ஈஸ்வரிநகர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் சந்தானகுமார், செயலாளர் கணேசன், பொருளாளர் சுரேஷ்குமார் துணைத்தலைவர்கள்: முத்தையன், குமாரசாமி, சதீஷ்குமார், அசோகன், இளங்கோவன், ராஜா, துணை செயலாளர்கள் தினேஸ், ஜெகதீஷ், மோகன், சாந்திப்பிரியா, கிருத்திகாரவி ஆகியோர் நிர்வாகி தேர்ந்து எடுக்க பட்டனர். கூட்டத்தில் தமிழக மின்வாரியம் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணி மாதம் ஒருமுறை கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் வணிகர்கள் நல வாரியத்திற்கு ஜி.எஸ்.டி வரி வசூல் உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வணிகர்களுக்கு வாரியத்தின் மூலம் உதவிட வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துனைத்தலைவர் இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

.