Welcome To weekly News Paper Delta
தஞ்சை வெண்ணாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம் - எம்பி முரசொலி நேரில் ஆய்வு
32 Views

தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த பள்ளயக்ரஹாரம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் நடக்கும் தூர்வாரும் பணியை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேற்று நேரில் பார்வையிட்டார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, எம்பி முரசொலியின் முன்னெடுப்பில் தற்போது பணிகள் தொடங்கி நடக்கிறது. பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். எம்பி முரசொலி கூறியது: திமுக ஆட்சியில் மு.க. ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையின்படி, ₹3.30 கோடி மதிப்பில் 7 பொக்லின் இயந்திரங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீர்நிலைகள் சீரமைப்பு பணி நடக்கிறது. மக்கள் கோரிக்கை வைக்கும் இடங்களில் இந்த இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். விவசாயிகள் இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

.