தஞ்சை பெரிய கோயிலில் 1,008 சங்காபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
தஞ்சாவூர்: கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு, தஞ்சை பெருவுடையார் கோவிலில் பெருவுடையாருக்கு இன்று (17.11.26)1,008 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாதம் முதல் சோமவாரமான இன்று, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் சிவாச்சாரியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் கவச நீர் எடுத்து சென்று 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அபிஷேகத்தை கண்டு பெருவுடையாரை வழிப்பட்டனர்