Welcome To weekly News Paper Delta
பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம் 500 கிலோ காய்,கனி வகையால் அலங்காரம்
90 Views

தஞ்சாவூர்,நவ.16 உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார். பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு நேற்று பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்,கனி வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பிறகு இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.

.