கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி – கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ரேவதி தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி சுபாஷ் கார்திக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.