Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர்: காளிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை
30 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காளியம்மன் என்கிற காளிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இன்றைய தினம் பக்தர்களுக்காக அம்மன் பாதத்தில் கொலுசுகள் அணிந்து காட்சி அளித்தாள். தல பெருமை: தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய தலைமை சிற்பிக்காக ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார் என்கிறது தல புராணம். பெரிய கோயிலில் பிரதி பௌர்ணமி வலம் வரும் பக்தர்கள் இத்தல அம்மனை வழிபட்டால் பெருவுடையார் அனுக்ரஹம் முழுமை பெறும். ஐதீகம்:இங்கு ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பேறு கிட்டும், எண்ணியவை எண்ணியபடி நடக்கும்.

.