Welcome To weekly News Paper Delta
தஞ்சை திரு இருதய ஆண்டவர் பேராலய தேர்த்திருவிழா
38 Views

தஞ்சாவூர்: 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் பேராலய ஆண்டு பெருவிழா தேர்ப்பவனி நேற்று சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. மறைமாவட்ட அதிபர் பேரருட் எஸ்.எம்.ஏ.பிரபாகர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் பவனி வந்தது. பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் மெழுகுதிரியுடன் பங்கேற்றனர். இன்று ஞாயிறு காலை ஆயர் மேதகு சகாயராஜ் தலைமையில் உறுதி பூசுதல், மாலையில் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராலய உதவி பங்குத்தந்தை பிரவின் குமார் தலைமையில் பங்கு பேரவையின் துணைத் தலைவர் கிளமென்ட், செயலர் சசுவரி, பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விளம்பரம்,செய்திகளுக்கு தொடர்புக்கு: டெல்டா டாக் டைம் செல்: 9443131345, 9442131345

.