காவிரி விவகாரம்: கர்நாடக அழைப்பு - முதல்வர் பங்கேற்பு குறித்து விரைவில் அறிவிப்பு"
தஞ்சாவூர்: தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்ட வேளாண்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "காவிரி நீர் தொடர்பாக கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் தமிழக முதல்வர் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார். "தற்போது தண்ணீர் இல்லை என கூறியிருக்கிறார்கள். ஒரு குழு அமைத்து தண்ணீர் நிலவரத்தை அறிந்து, என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசனை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார். மேலும் "தமிழக அரசு ஒருபோதும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்காது" என்று உறுதியாக கூறினார்.