தஞ்சையில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பு!
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கத்தரிநத்தத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞானாம்பிகை அம்மன் சமேத அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பட்டு, சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றனர். விமான கோபுர கலசங்களுக்கு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஹைலைட்: பெரிய ட்ரோன் மூலம் திரண்டிருந்த ஏராளமான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பாக்ஸ் நியூஸ்: கும்பாபிஷேகம் கோயில்: அருள்மிகு ஞானாம்பிகை அம்மன் சமேத காளகஸ்தீஸ்வரர் இடம்: கத்தரிநத்தம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே, தஞ்சை தொடக்கம்: ஜூன் 29 - விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் இன்று: நான்காம் கால யாகம், மஹா பூர்ணாஹுதி, கும்பாபிஷேகம் சிறப்பு: ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பு பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம்