தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324F, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் லயன்ஸ் சங்கத்தின் 2026-27 ஆம் ஆண்டுக்கான பணியேற்பு விழா தஞ்சை லயன்ஸ் கோல்டன் ஜூப்ளி ஹாலில் நடைபெற்றது. லயன்ஸ் சங்க தலைவர் சங்கீதா தலைமையில் நடந்த இந்த விழாவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக மாரிமுத்து பொறுப்பேற்றார். புதிய நிர்வாகிகளை பிரேம் பணியில் அமர்தி வாழ்துரை வழங்கினார். இதில் செயலாளர் சுப்பிரமணியன்,பொருளாளர் சிவா,இராஜேந்திரன், ஆனந்தகிருஷ்ணா, அன்புச்செல்வன், பாலசுப்ரமணியன், செந்தில்குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்துரை வழங்கினர். விழாவில் ஏராளமான லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.