Welcome To weekly News Paper Delta
சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம்
34 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடக்குவீதி இராஜ கோபால சுவாமி கோயிலில் இன்று 24ம் தேதி புதன்கிழமை சுதர்சன ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை சுதர்சன ஹோமமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை அஷ்ட புஜ சக்கரத்தாழ்வார் சதுர்புஜ சக்கரத்தாழ்வாராக மலர்அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.நான்கு ராஜ வீதிகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இக்கோயில் தஞ்சாவூரில் சக்கரத்தாழ்வாருக்கு என தனிப்பட்ட ஒரே கோயிலாகும். சங்கடங்கள் நீங்க, சந்தோஷம் நிலைக்க, எதிரிகள் ஏற்படும் தொல்லைகள் நீங்க, தொழில் அபிவிருத்தி ஏற்பட்ட, திருமணம் நடைபெற, குழந்தை பேறு கிட்ட, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நல்லது. இன்றைய வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தார்கள்.

.