Welcome To weekly News Paper Delta
பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசை
30 Views

தஞ்சாவூர், ஆக.26: தஞ்சாவூர் கீழவீதியில் புகழ்பெற்ற மகாலெட்சுமி அம்மன் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் இன்று (26.08.2026) புதன்கிழமை காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனுக்கும், ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் தனித்தனி விமானம் மற்றும் ராஜகோபுரம் அமைந்துள்ள இத்தலம், தஞ்சாவூரில் கிழக்கு நோக்கி இரண்டு ராஜகோபுரங்கள் கொண்ட ஒரே ஆலயம் என்ற தனிச்சிறப்பு பெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

.