Welcome To weekly News Paper Delta
வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர் பகுதிகளில் 29-ம் தேதி மின்தடை
26 Views

தஞ்சாவூர், செப்.26– திருமலைசமுத்திரம் துணை மின் நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதன்படி வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்ணையப்பட்டி, வளம்பக்குடி, ராயமுண்டான்பட்டி, ராயரம்பட்டி, சாணாரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாவையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். மேலும் அள்ளூர், ஆலக்குடி, அம்மையகரம், தென்னாங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரசாமந்தம், களிமேடு, மணவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.