சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பில், பெரியார் நகரில் அமைந்துள்ள டாக்டர் T.தவழ்மதி ஜெயமதி மருத்துவமனை வளாகத்தில் ஆளுநரின் திட்டங்களில் ஒன்றான மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. டாக்டர் T.ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத் தலைவர் P.செல்வராஜ், செயலாளர் S.சுரேஷ்குமார், வட்டாரத் தலைவர் இன்ஜினியர் துரை சரவணன், உடனடி முன்னாள் தலைவர் K.சோமசுந்தரம், முதல் துணைத் தலைவர் k.கருணா அழகர்சாமி, இயக்குநர் R.சந்தானகுமார், மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் T.தவழ்மதி மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.